ஒரு ஆரோக்கியமான மற்றும் எளிதான இட்லி, தோசைக்கான கறிவேப்பிலை சட்னி.
தேவையான பொருட்கள்
கறிவேப்பில்லை – ஒரு கப்
உளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
பச்சை மிளகாய் – இரண்டு
புலி – சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு லேசாக வறுத்து எடுக்கவும்.
பிறகு, அதே கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு, வறுத்த கறிவேப்பில்லை, வறுத்த உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, புலி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.
Turmarind pottu thaana chutny pannanum?? Neenga tiger 🐯 ah add panna sollirukkinga ☺ ☺ but recepie nalla irunthathu. Good