ஒரு சுவையான மற்றும் பிரபலமான பஞ்சாபி உணவாகும்.
தேவையான பொருட்கள்
ராஜ்மா – ஒரு கப் (எட்டு மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்தது)
எண்ணெய் – மூன்று டீஸ்பூன்
தக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து, நறுக்கியது)
அரைக்க:
மிளகு – அரை டீஸ்பூன்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
பூண்டு – ஐந்து பல்
தேங்காய் துண்டு – கால் கப்
சின்ன வெங்காயம் – கால் கப்
பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
சோம்பு – அரை டீஸ்பூன்
பட்டை – இரண்டு
லவங்கம் – இரண்டு
அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து, அரைத்த விழுது மற்றும் வேகவைத்த ராஜ்மா சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கிளறவும்.
பின், சிறிதளவு தண்ணீர், கொத்தமல்லி, வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிட்டு பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.
Rajma Masala Recipe in English