519
ஒரு சுவையான, ஆரோக்கியமான மற்றும் செய்ய மிகவும் எளிமையான கொழுக்கட்டை .
தேவையான பொருட்கள்
கம்பு மாவு – ஒரு கப்
வெள்ளம் – முக்கால் கப்
முந்திரி துண்டு – இரண்டு டீஸ்பூன்
தேங்காய் துண்டு – இரண்டு டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
ஒரு கிண்ணத்தில் வெள்ளம் போட்டு முழுகுற அளவு தண்ணீர் ஊற்றி கரைந்தவுடன் எடுத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.
இன்னொரு கிண்ணத்தில் கம்பு மாவு, தேங்காய் துண்டு, முந்திரி துண்டு, தேவையான அளவு வெள்ளம் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
கையில் ஒட்டாத அளவிற்கு பிசைந்து கொள்ளவும்.
பின், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து பதினைத்து நிமிடம் ஆவி கட்டி எடுத்து பரிமாறவும்.
1 comment
please translate this…