மொறுமொறுப்பான மற்றும் சுவையான தேநீர் நேரம் அல்லது மாலை சிற்றுண்டி.

Note: image is for illustration purposes only and not that of the actual recipe.
தேவையான பொருட்கள்
அவல் – ஒரு கப் (பொடி செய்தது)
வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு – அரை கப்
கடலை மாவு – கால் கப்
உப்பு – தேவைகேற்ப
பெருங்காயம் – சிறிதளவு
இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – மூன்று (பொடியாக நறுக்கியது)
கரிவேபில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் அவல், உருளைக்கிழங்கு மசித்தது, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கரிவேபில்லை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.