ஒரு பிரபலமான தென்னிந்திய உணவுப்பண்டமாகும், மிளகு போண்டா ஒரு மாலை சிற்றுண்டியாக உண்ணப்படுகிறது.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – ஒரு கப்
மைதா மாவு – முக்கால் கப்
சோடா மாவு – இரண்டு சிட்டிகை
உப்பு – தேவைகேற்ப
தேங்காய் – கால் கப்
பூண்டு – நான்கு பல்
மிளகு – ஒரு டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)
செய்முறை
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மைதா மாவு, சோடா மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தேங்காய், பூண்டு, மிளகு, சோம்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து கிண்ணத்தில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின், அதில் தண்ணீர் சிறிதளவு சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு, அதில் வெங்காயம் சேர்த்து கலந்து, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.