Tamil

பீட்ரூட் வடை

0 comments

பீட்ரூட் வடை ஒரு செட்டிநாடு சுவையாகவும். மாலை சிற்றுண்டி பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

Beetroot Vadai
image via youtube video

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – ஒரு கப் (ஒரு மணி நேரம் ஊறவைத்தது)

பீட்ரூட் – ஒரு கப் (துருவியது)

சோம்பு – ஒரு டீஸ்பூன்

கரிவேபில்லை – சிறிதளவு

பூண்டு – நான்கு பல்

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய் – இரண்டு

காய்ந்த மிளகாய் – இரண்டு

உப்பு – தேவைகேற்ப

பெருங்காயம் – சிறிதளவு

பொட்டு கடலை மாவு – தேவைகேற்ப

வெங்காயம் – மூன்று (பொடியாக நறுக்கியது)

கடலை பருப்பு – இரண்டு டீஸ்பூன் (அரை மணி நேரம் ஊறவைத்தது)

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஒரு கிண்ணத்தில் ஊறவைத்த துவரம் பருப்பு, பீட்ரூட், சோம்பு, கரிவேபில்லை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், பொட்டு கடலை மாவு தேவைகேற்ப சேர்த்து அனைத்தையும் விழுதாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்.

பிறகு, அதில், வெங்காயம், ஊறவைத்த கடலை பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

தண்ணியாக இருந்தால் சிறிதளவு பொட்டு கடலை மாவு சேர்த்து கொள்ளலாம்.

சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Recipe in English

Subscribe to our Newsletter

Receive the latest recipes & kitchen tips !

Thanks for subscribing. Please check your mail and confirm the subscription.

Something went wrong.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*