ஒரு பிரபலமான தென்னிந்திய கூட்டு வகை.
தேவையான பொருட்கள்
அத்திக்காய் – 1௦௦ கிராம் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் – அரை கப்
சீரகம் – அரை டீஸ்பூன்
பாசிப்பருப்பு – அரை கப்
காய்ந்தமிளகாய் – ஒன்று
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
இஞ்சி – சிறு துண்டு
மிளகு – அரை டீஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் விட்டு காய்ந்ததும் அத்திக்காய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து லேசாக வதக்கி எடுத்து கொள்ளவும்.
பச்சிப்பருப்பை வேகவைத்து குழைய வேகவைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், இஞ்சி துருவல், மிளகு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.
பின், அதில் தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி ஆறவைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
பின், வதக்கிய அத்திக்காய், வேகவைத்த பாசிப்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
2 comments
Dear Sir/Madam,
I need Green Athikai for cooking. Where can we get in Chennai, Am in medavakkam
Please try Pazhai Mudircholai or try the Nilgiris super market. They will have them.