ஒரு ருசியான மற்றும் எளிய மாலை சிற்றுண்டி.
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் – அரை கப் (சுடு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து, பொடியாக நறுக்கியது)
கடலை மாவு – இரண்டு டீஸ்பூன்
கசகசா – கால் டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
செய்முறை
ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி வைத்து கொள்ளவும்.
இன்னொரு கிண்ணத்தில் வடிகட்டிய காலிஃபிளவர், கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
Receive the latest recipes & kitchen tips !