984
அரிசி மற்றும் தேங்காய் பயன்படுத்தி செய்யப்பட்ட நீர் தோசை தென் இந்தியாவில் பிரபலமான தோசை வகையாகும்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – ஒரு கிலோ
தேங்காய் – ஒன்று (துருவியது)
உப்பு – தேவைகேற்ப
சர்க்கரை – இரண்டு டீஸ்பூன்
செய்முறை
பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கழுவி அதனுடன், தேங்காய் துருவல் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
பிறகு, ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுடன் உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நீர்க்க கலந்து கொள்ளவும்.
பிறகு, தவாவில் எண்ணெய் தெளித்து, ஒரு கரண்டி மாவு ஊற்றி தவாவை பரப்பி விடவும்.
மேலே சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
கார சட்னி வைத்து பரிமாறலாம்.