இது ஒரு ஆரோக்யமான தோசை. காலை அல்லது மாலை சட்னி உடன் சாப்பிடலாம். A healthy Dosa variety made with multigrains and can be served as a breakfast or evening snack.
தேவையான பொருட்கள்
பார்லி – கால் கப்
கம்பு – கால் கப்
புழுங்கல் அரிசி – ஒரு கப்
முழு உளுத்தம் பருப்பு – கால் கப்
ராகி மாவு – கால் கப்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
பார்லி, கம்பு, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக இரவு ஊறவைத்து காலை அனைத்தையும் கழுவி ஒன்றாக சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ளவும், ராகி மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தவாவை காய வைத்து அதில் தோசை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.
—
மல்டி க்ரேய்ன் தோசை செய்முறை வீடியோ – Multigrain Dosa Recipe Video