தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – இரண்டு கப்
பீன்ஸ் – 2௦௦ கிராம் (பொடியாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்)
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
கடலை பருப்பு – இரண்டு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்
தோசை மாவு – இரண்டு கரண்டி
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
வெங்காய தாள் – கால் கப் (நறுக்கியது)
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வந்தவுடன் வெங்காயம், வெங்காய தாள் சேர்த்து வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் வதக்கிய பொருட்களுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, தோசை மாவு, கோதுமை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
பிறகு, தவாவில் அடை போல் ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சிவந்தவுடன் எடுத்து பரிமாறவும்.