222
தேவையான பொருட்கள்
பாலக் கீரை – கால் கப் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பாலக் கீரை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
மூன்று நிமிடம் வதக்கிய பின் எடுத்து வைத்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் தயிர், உப்பு மற்றும் வதக்கிய பாலக் கீரை, காய்ந்த மிளகாய் சேர்த்து கலந்து பரிமாறவும்.