ஒரு பிரபலமான மற்றும் சுவையான மாலை சிற்றுண்டி போண்டா.
தேவையான பொருட்கள்
மைதா மாவு – கால் கிலோ
புளித்த தயிர் – 2௦௦ கிராம்
பச்சை மிளகாய் – இரண்டு (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – சிறு துண்டு (பொடியாக நறுக்கியது)
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
சோடா மாவு – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், கரிவேபில்லை, பெருங்காயம், உப்பு, சோடா மாவு, பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு, அதில் தயிர் சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் கைவிடாமல் பிசைந்து கொள்ளவும்.
பின், அந்த மாவை பதினைந்து நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான போண்டா ரெடி.
Mangalore Bonda Recipe in English
Receive the latest recipes & kitchen tips !