செய்ய எளிதாக இருக்கும் என்று ஒரு ஆரோக்கியமான மற்றும் பர்கர்.
தேவையான பொருட்கள்
முட்டை – இரண்டு
மிளகு தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
பர்கர் பன் – இரண்டு துண்டு
லெட்டுஸ் – ஒரு துண்டு (வட்டமாக நறுக்கியது)
சில்லி மயோனேஸ் – இரண்டு டீஸ்பூன்
ஃபாயில் பேப்பர் – ஒன்று
செய்முறை
ஒரு கிண்ணத்தில் முட்டை ஊற்றி அடித்து கொள்ளவும்.
பிறகு, அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து, மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும்.
பர்கர் துண்டை தவாவில் போட்டு சிறிதளவு வெண்ணெய் சேர்த்து ரோஸ்ட் செய்து கொள்ளவும்.
பிறகு, ரோஸ்ட் செய்த ஒரு பர்கர் துண்டின் மேல் சில்லி மயோனேஸ் தடவவும்.
பின், அதன் மேல் லெட்டுஸ், முட்டை., அதன் மேல் பர்கர் துண்டு வைத்து ஒரு பேப்பர் நடுவில் வைத்து மடித்து, ஐந்து நிமிடம் ஓவனில் வைத்து எடுத்தால் சுவையான எக் பர்கர் தயார்.