552
பிரபலமான தென்னிந்திய தோசை வெரைட்டி. சட்னி மற்றும் சாம்பாருடன் சேர்த்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள்
ரவை – அரை கிலோ
பச்சை மிளகாய் – 5௦ கிராம் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
மைதா – 1௦௦ கிராம்
சீரகம் – நான்கு டீஸ்பூன்
வெங்காயம் – 2௦௦ கிராம் (பொடியாக நறுக்கியது)
முந்திரி – சிறிதளவு (உடைத்தது)
இஞ்சி – 5௦ கிராம் (விழுதாக அரைத்து கொள்ளவும்)
உப்பு – தேவைகேற்ப
தோசை மாவு – தேவையான அளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா மாவு, சீரகம், உப்பு, முந்திரி, பச்சை மிளகாய், இஞ்சி, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு, அதில் தோசை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின், தோசை கல்லில் ஊற்றி மேலே வெங்காயம் பரவலாக தூவி, எண்ணெய் சுற்றி ஊற்றி, தோசை திருப்பிப் போடாமல், வெந்ததும் எடுக்கவும்.