288
வேர்கடலை மற்றும் அன்னாசி உடன் ஒரு எளிய மற்றும் சுவையான சாலட்.
தேவையான பொருட்கள்
வேகவைத்த வேர்கடலை – அரை கப்
பைன்ஆப்பிள் – அரை கப்
ஆப்பிள் – கால் கப் (தேவைப்பட்டால்)
எலுமிச்சை பழம் சாறு – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
சாட் மசாலா – அரை டீஸ்பூன்
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் வேகவைத்த வேர்க்கடலை, பைன்ஆப்பிள், எலுமிச்சை பழம் சாறு, உப்பு, சாட் மசாலா, மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.