ப்ரோக்கோலி, சீஸ், வெங்காயத்தாள் கொண்ட பெண்ணே பாஸ்தா.
தேவையான பொருட்கள்
ப்ரோகோலி – ஐந்து துண்டு
வெண்ணெய் – 5௦ கிராம்
மஷ்ரூம் – இரண்டு டீஸ்பூன் (நறுக்கியது)
வெங்காயதாள் – இரண்டு டீஸ்பூன்
கீரிம் சீஸ் சாஸ் – நான்கு டீஸ்பூன்
வேகவைத்த பெண்னே பாஸ்தா – அரை கப்
சீஸ் துருவியது – மூன்று டீஸ்பூன்
வெள்ளை மிளகு தூள் – ஒன்றை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
கடாயில் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிம்மில் வைத்து ப்ரோகோலி, மஷ்ரூம், வெங்காய தாள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின், கீரிம் சீஸ் சாஸ், பாஸ்தா சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பிறகு, துருவிய சீஸ், வெள்ளை மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறி மூன்று நிமிடம் கழித்து இறக்கவும்.
image via bbc good food