தேவையான பொருட்கள்
எள்ளு – 1௦௦ கிராம்
சீரகம் – நான்கு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – பனிரெண்டு
பூண்டு – பத்து
புளி – அரை எலுமிச்சை பழம் அளவு
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
கடாயில் எள்ளு சேர்த்து வெடித்து வந்தவுடன் எடுத்து வைத்து கொள்ளவும்.
பிறகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒவொன்றாக தனித்தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு, புளி, வறுத்த சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், எள்ளு, தேவைகேற்ப உப்பு சேர்த்து தொகையல் போல் அரைத்து கொள்ளவும்.
சுவையான எள்ளு தொகையல் ரெடி.