தேவையான பொருட்கள்
மீன் துண்டு – ஒன்று (முள்ளிலாத நீளமான துண்டு)
இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
எலுமிச்சை பழம் சாரு – முன்று சொட்டு
அடித்த முட்டை – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
குடை மிளகாய் – இரண்டு டீஸ்பூன், பொடியாக நறுக்கியது, (சிகப்பு, மஞ்சள், பச்சை நிறம் குடைமிளகாய்)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சை பழம் சாறு, முட்டை, உப்பு, மிளகு தூள், குடைமிளகாய் சேர்த்து நன்றாக கலக்கி அதில் மீன் துண்டு சேர்த்து தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு, மீனை ஒரு வாழை இலையில் சுருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டவும்.
பத்து நிமிடங்கள் பிறகு, வாழை இலையை எடுத்து விட்டு சூடாக பரிமாறவும்.