தேவையான பொருட்கள்
முட்டைகோஸ் – கால் கப்
உளுத்தம் பருப்பு – கால் கப்
காய்ந்த மிளகாய் – நான்கு
புளி – கோலி குண்டு அளவு
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – மூன்று டீஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டையும் வறுத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு, அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோஸ் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி எடுத்து கொள்ளவும்.
வறுத்த உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கோஸ் மற்றும் புளி, உப்பு சேர்த்து தொகையல் போல் அரைத்தால் கோஸ் தொகையல் தயார்.