தேவையான பொருட்கள்
பொட்டுகடலை – அரை கப் (பொடி செய்து கொள்ளவும்)
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
தக்காளி – இரண்டு (*பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக குழையும் வரை வதக்கவும்.
பிறகு, ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், உப்பு, பொட்டுகடலை மாவு, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் ஊற்றி கைவிடாமல் கிளறவும். சிம்மில் வைத்து நடுவில் கிளறி கொண்டே பத்து நிமிடம் கொதிக்கவிட்டு கரிவேபில்லை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான சிம்பிள் சாம்பார் தயார்.