தேவையான பொருட்கள்
பன்னீர் – அரை கப் (துருவியது)
சீரகம் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
பிரட் துண்டு – நான்கு (ஓரம் பிரவுன் கலரை நறுக்கி விடவும்)
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு
செய்முறை
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பன்னீர் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிய பின், சீரக தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கிளறி நான்கு நிமிடம் கழித்து இறக்கி கொத்தமல்லி தூவி வைத்து கொள்ளவும்.
பிரட் துண்டுகளை ரொட்டி கட்டையால் திரட்டி கொள்ளவும்.
பிறகு, ஒரு பிரட் துண்டின் மேல் பன்னீர் கலவையை சிறிதளவு வைத்து பரப்பி அதன் மேல் இன்னொரு பிரட் துண்டு வைத்து தவாவில் போட்டு சுற்றி நெய் ஊற்றி ரோஸ்ட் செய்து திருப்பி போட்டு ரோஸ்ட் செய்து எடுத்தால் பன்னீர் ரோஸ்ட் தயார்.