தேவையான பொருட்கள்
கசகசா – ஐந்து டீஸ்பூன் (லேசாக வறுத்தது)
ஏலக்காய் – ஐந்து
பச்சரிசி – மூன்று டீஸ்பூன்
தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு கப்
நெய் – தேவையான அளவு
தேங்காய் பால் – ஒரு கப்
காய்ச்சிய பால் – ஒரு கப்
முந்திரி – பத்து
திராட்சை – பத்து
செய்முறை
பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு, ஊறவைத்த அரிசி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
அதே போல் கசகசா, ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை பொடி செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் தேங்காய் துருவல் அரைத்த விழுது, கசகசா, ஏலக்காய், சர்க்கரை அரைத்த பவுடர் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சிம்மில் வைத்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
நடுவில் கிளறிகொண்டே இருக்கவும்.
தேவைபட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்.
பத்து நிமிடம் கழித்து இறக்கி ஆறவைத்து தேங்காய் பால், காய்ச்சிய பால், நெய் சிறிதளவு ஊற்றி கிளறவும்.
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதில் சேர்த்து கிளறவும்.
சுவையான கசகசா பாயாசம் ரெடி.