தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – ஒரு கப்
வேகவைத்த உருளைகிழங்கு – அரை கப்
வேகவைத்த பச்சை பட்டாணி – கால் கப்
பன்னீர் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
அம்சூர் பவுடர் – ஒரு டீஸ்பூன்
கிரீன் சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும்.
பிறகு, அதில் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து தோசை போல் ஊற்றி எடுத்து கொள்ளவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பன்னீர் சேர்த்து வறுக்கவும்.
பின், அதில் வேகவைத்த பச்சை பட்டாணி, உருளைகிழங்கு, உப்பு, பச்சை மிளகாய் சாஸ், ஆம்சூர் பவுடர் சேர்த்து கிரைவி பதம் வந்ததும் இறக்கி வைத்து கொள்ளவும்.
பின், கோதுமை தோசையில் கிரைவியை வைத்து ரோல் செய்து பரிமாறவும்.