244
தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளைகிழங்கு – கால் கப் (பொடியாக நறுக்கியது)
வேகவைத்த சென்னா – கால் கப் (இரண்டையும் உப்பு போட்டு வேகவைக்கவும்)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு
வெல்லம் பொடித்தது – ஒரு டீஸ்பூன்
பொடி செய்த காய்ந்த மிளகாய் – ஒரு டீஸ்பூன்
இடித்த பூண்டு – இரண்டு பல்
உப்பு – தேவைகேற்ப
புளி கரைச்சல் – அரை டீஸ்பூன்
வறுத்த வேர்கடலை – இரண்டு டீஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் வேகவைத்த சென்னா, உருளைகிழங்கு, வெங்காயம், தக்காளி, வெல்லம், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் பொடி, இடித்த பூண்டு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
பிறகு, புளி கரைச்சல் சேர்த்து கிளறவும்.
பின், பரிமாறும் முன் வேர்கடலை மற்றும் கொத்தமல்லி சிறிதளவு தூவி பரிமாறவும்.