586
தேவையான பொருட்கள்
கம்பு – இரண்டு கப் (வடிகட்டில் போட்டு கழுவி ஒன்றும்பதியுமாக அரைத்து கொள்ளவும்)
தயிர் – தேவையான அளவு
வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரைத்த கம்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
கம்பு நன்றாக வெந்ததும் இறக்கி கொள்ளவும்.
பின், ஆறவைத்து அதில் தயிர், வெங்காயம், உப்பு சேர்த்து கரைத்து பரிமாறவும்.