306
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – ஒன்றை கப்
சர்க்கரை – ஒரு கப்
வெண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
பால் – கால் கப்
பேரீச்சம்பழம் விழுது – அரை கப்
செய்முறை
அடுப்பில் கடாயை வைத்து அதில் சர்க்கரை, பால், வெண்ணெய் சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.
பின், பேரீச்சம்பழம் விழுது சேர்த்து ஒரு சேர கிளறவும்.
பிறகு ஓட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடம் கழித்து எறக்கி சின்ன கரண்டியில் நிரப்பி அழுத்தி ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதில் கொட்டவும்.
ஆறியதும் எடுத்து பரிமாறவும்.