தேவையான பொருட்கள்
அப்ரிகாட் – மூன்று (பொடியாக நறுக்கியது)
அல்பான்சோ மாங்காய் பழம் – அரை கப் (பொடியாக நறுக்கியது)
காய்ச்சிய பால் – முக்கால் டம்ளர்
சர்க்கரை – தேவைகேற்ப
செய்முறை
மாங்காய் பழத்தை விழுதாக அரைத்து கொள்ளவும்.
பிறகு, அதில் கால் டம்ளர் பால் ஊற்றி மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
ஒரு கிளாஸ் டம்ளரில் அப்ரிகாட், அரைத்த மாம்பழம் விழுது, மற்றும் அரை டம்ளர் பால் ஊற்றி கலக்கி குளிர்சாதனை பெட்டியில் அரை மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறவும்.