கோஸ் மசாலா புட்டு

By | Published , Last Updated: July 26, 2014 | Tamil | No Comment

Cabbage

தேவையான பொருட்கள்

கோஸ் – ஒன்றை கப் (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் – இரண்டு குழிகரண்டி

கடுகு – அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஒன்று

கரிவேபில்லை – சிறிதளவு

கடலை பருப்பு – இரண்டு டீஸ்பூன்

வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

தனியா தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகு தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

பொட்டுக்கடலை மாவு – ஒரு கை

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சிம்மில் வைத்து மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள் அரை டீஸ்பூன், கோஸ், உப்பு ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து கிளறவும்.

சிம்மில் வைத்து முக்கால் பாகம் வெந்ததும் பொட்டுக் கடலை மாவு சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Please wait...

இந்த கோஸ் மசாலா புட்டு செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: