596
தேவையான பொருட்கள்
இறால் – ஒரு கப் (சுத்தம் செய்தது)
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)
பூண்டு – இரண்டு பல்
கரிவேபில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
சோல மாவு – இரண்டு டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
சுத்தம் செய்த இறால், பச்சை மிளகாய், பூண்டு, கரிவேபில்லை, கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
பிறகு, அந்த கலவைவுடன் உப்பு, மிளகு தூள், சோல மாவு, வெங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வடை போல் தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான இறால் வடை தயார்.