தேவையான பொருட்கள்
மீன் – அரை கப் (சதை பகுதி நன்றாக மசித்தது)
பூண்டு – மூன்று (பொடியாக நறுக்கியது)
கேரட் துருவல் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி விழுது – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு கிண்ணத்தில் மீன் சதை மசித்தது, பூண்டு, கேரட், இஞ்சி விழுது, உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி, எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு, தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்ததை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாக செய்து ஒவொன்றாக போட்டு சிறு தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான கட்லெட் ரெடி.