Home Tamil வைகை மீன் குழம்பு

வைகை மீன் குழம்பு

Published under: Tamil

Nethili Meen Kuzhambu

தேவையான பொருட்கள்

கட்லா மீன் – ஆறு துண்டு

தேங்காய் எண்ணெய் – இரண்டு தேகரண்டி

கடுகு – அரை டீஸ்பூன்

வெந்தயம் – அரை டீஸ்பூன்’

சீரகம் – கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – இரண்டு

கரிவேபில்லை – சிறிதளவு

இஞ்சி – சிறு துண்டு (துருவியது)

பச்சை மிளகாய் – இரண்டு (கீறியது)

பூண்டு – பத்து பல்

சின்ன வெங்காயம் – பத்து (நறுக்கியது)

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்

தனியா தூள் – மூன்று டீஸ்பூன்

புளி – ஒரு எலுமிச்சை பழம் அளவு

தக்காளி – மூன்று (விழுதாக அரைத்தது)

உப்பு – தேவைகேற்ப

தேங்காய் பால் – அரை கப்

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், கரிவேபில்லை போட்டு தாளிக்கவும்.

இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.

புளி கரைச்சல், தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்கவிடவும்.

தக்காளி விழுது, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

மீன், தேங்காய் பால் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Leave a Comment

Adblock Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker on our website.