சீஸ் கார்ன் கச்சோரி

Tamil 0 comments

kachori - சீஸ் கார்ன் கச்சோரி

தேவையான பொருட்கள்

மைதா – இரண்டு கப்

சீஸ் – 2௦௦ கிராம்

ஸ்வீட் கார்ன் – இரண்டு கப்

இஞ்சி, பூண்டு விழுது – இரண்டு டீஸ்பூன்

கரம் மசாலா – இரண்டு டீஸ்பூன்

எலுமிச்சை பழம் சாறு – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஸ்வீட் கார்னை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அடித்து பிசைந்து, ஊறவைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா, அரைத்த கார்ன், உப்பு சேர்த்து வதக்கவும்.

எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி ஆறவிடவும்.

சீஸை துருவி அதில் சேர்த்து கிளறவும்.

மைதா மாவை பிசைந்து பூரியாக திரட்டி, கார்ன் கலவையை வைத்து மூடி, அதிக அழுத்தம் தராமல் தட்டி, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*