503
தேவையான பொருட்கள்
அவல் – அரை கப்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)
காய்ந்த மிளகாய் – ஒன்று
கரிவேபில்லை – சிறிதளவுn
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
பச்சை பட்டாணி – இரண்டு டீஸ்பூன்
உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து நறுக்கியது)
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், வெங்காயம், கரிவேபில்லை, பச்சை பட்டாணி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.
பின், அவலை சுடு தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைத்து வடிகட்டி அதில் போட்டு மூன்று நிமிடம் கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.