828
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி – ஒரு கப் (சுடு தண்ணிரில் உப்பு போட்டு அரை மணி நேரம் ஊறவைத்தது)
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
கரிவேபில்லை – சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு உப்பு, கரிவேபில்லை, மஞ்சள் தூள், கரம் மசாலா, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.