278
தேவையான பொருட்கள்
மைதா மாவு – ஒரு கப்
வாழைபழம் – இரண்டு
முந்திரி துண்டு – இரண்டு டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
சர்க்கரை – கால் கப்
சோடா மாவு – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, வாழைபழம் நன்கு குழைத்தது, முந்திரி துண்டுகள், ஏலக்காய் தூள், சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அப்பம் மாவு போல் கெட்டியாக பிழைந்து கொள்ளவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரண்டியில் ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி வட்டமாக ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான இனிப்பு அப்பம் ரெடி.