தேவையான பொருட்கள்
மைதா மாவு – நான்கு டீஸ்பூன்
அரிசி மாவு – இரண்டு டீஸ்பூன்
சோடா மாவு – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைகேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
கடலை பருப்பு – -அரை கப் (முக்கால் வேக்காடு வேகவைத்தது)
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
வெல்லம் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் – மூன்று டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, சோடா மாவு, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
வேகவைத்த கடலை பருப்பை மிக்ஸ்யில் கொரகொரவென்று அரைத்து கொள்ளவும் தண்ணீர் ஊற்றாமல்.
ஒரு கிண்ணத்தில் அரைத்த கடலை பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், பொடித்த வெல்லம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
அந்த உருண்டையை கரைத்த மாவில் துவைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.