
image via epicurious
தேவையான பொருட்கள்
சிக்கன் – அரை கிலோ
கொத்தமல்லி – அரை கட்டு (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை
வெங்காயம் – இரண்டு (வட்டமாக நறுக்கியது)
தக்காளி – ஒன்று (வட்டமாக நறுக்கியது)
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஐந்து
லவங்கம் – ஐந்து
பட்டை – மூன்று
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை பழம் சாறு – இரண்டு டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – இரண்டு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஐந்து
எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை
கொத்தமல்லி, மிளகு, லவங்கம், இஞ்சி, பூண்டு விழுது, பட்டை, மனஜ்ல் தூள், சீரகம், சர்க்கரை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
பிறகு, ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த சிக்கன் மற்றும் அரைத்த விழுது, எலுமிச்சை பழம் சாறு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பின், ஊறவைத்த சிக்கன் சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.
சுண்ட வதக்கியதும் இறக்கி பரிமாறவும்