653
தேவையான பொருட்கள்
கோவக்காய் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
உளுத்தம் பருப்பு – ஐந்து டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்
பெருங்காயம் – இரண்டு சிட்டிகை
உப்பு – தேவைகேரப்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், கோவக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். ஆறியதும், கொரகொரவென்று அரைத்து கொள்ளவும். இந்த சட்னி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த சட்னி.