மஷ்ரூம் எக் ஃப்ரை

Tamil 0 comments

mushrooms - மஷ்ரூம்  எக் ஃப்ரை

தேவையான பொருட்கள்

மஷ்ரூம் – அரை கப் (பொடியாக நறுக்கியது)

முட்டை – இரண்டு

எண்ணெய் – தேவையான அளவு

கரிவேபில்லை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

பிரிஞ்சி இலை – ஒன்று

உப்பு – தேவைகேற்ப

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்

மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்

பட்டை – ஒன்று

லவங்கம் – ஒன்று

ஏலக்காய் – ஒன்று

வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)

தக்காளி – ஒன்று (நறுக்கியது)

கரம் மசாலா – சிறிதளவு

செய்முறை

முட்டையை அடித்து அதில் கால் டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலக்கி ஆவி கட்டி வேகவைத்து கொள்ளவும்.

பிறகு, அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

பின், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெங்காயம், கரிவேபில்லை, தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா,மிளகு தூள், உப்பு, சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

பிறகு, மஷ்ரூம் தண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.பின், வெட்டிய முட்டை துண்டுகள் மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*