தேவையான பொருட்கள்
கருனைகிழங்கு – அரை கப் (பொடியாக நறுக்கியது)
வாழைக்காய் – அரை கப் (பொடியாக நறுக்கியது)
கடலை பருப்பு – கால் கப்
பயத்தம்பருப்பு – கால் கப்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
தேங்காய் துண்டுகள் – கால் கப்
காய்ந்த மிளகாய் – ஐந்து
தனியா – இரண்டு டீஸ்பூன்
சீரகம் – இரண்டு டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் – தேவைகேற்ப
கடுகு – கால் டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
செய்முறை
குக்கரில் கருணைக்கிழங்கு, வாழைக்காய், கடலை பருப்பு, பயத்தம்பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி மூன்று விசில் வந்தவுடன் இறக்கி விடவும்.
கடாயை சூடு செய்து அதில் தேங்காய் துண்டுகள், காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், சோம்பு, கரிவேபில்லை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
பிறகு, அதை விழுதாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதை குக்கரில் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கரிவேபில்லை சேர்த்து தாளித்து அதில் கொட்டி கிளறி இறக்கி பரிமாறவும்.