Home Tamil புதினா கேழ்வரகு பக்கோடா

புதினா கேழ்வரகு பக்கோடா

Published under: Tamil

Ragi Mint Pakora

தேவையான பொருட்கள்

புதினா – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

கேழ்வரகு மாவு – இரண்டு கப்

கடலை மாவு – நான்கு டீஸ்பூன்

அரிசி மாவு – நான்கு டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்

தண்ணிர் – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, நறுக்கிய புதினா, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, கறிவேப்பிலை கொத்தமல்லி, மிளகாய் தூள், சிறிதளவு தண்ணிர் தொளித்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை பக்கோடா போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.

image via oh taste and see

Leave a Comment