309
தேவையான பொருட்கள்
பப்பாளி காய் – ஒரு கப் (தோல் நீக்கி துருவியது)
மாங்காய் – அரை கப் (தோல் நீக்கி துருவியது)
பிரவுன் சுகர் – கால் கப்
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
புளி பேஸ்ட் – இரண்டு டீஸ்பூன்
பச்சை மிளகாய், பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
வேற்கடலை – அரை கப் (ஒன்றும்பதியும்மாக உடைத்தது)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பிரவுன் சுகர், சோயா சாஸ், புளி பேஸ்ட், பச்சை மிளகாய், பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
பிறகு, பப்பாளி காய் துருவல், மாங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
இறுதியாக வேர்கடலை சேர்த்து கிளறி பரிமாறவும்.