396
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – அரை கப்
பால் – இரண்டு கப்
நெய் – நான்கு தேகரண்டி
முந்திரி – பத்து
சர்க்கரை – 1/3 கப் (அல்லது தேவையான அளவு)
பாதாம் – பத்து
ஏலக்காய் தூள் – சிறிதளவு
செய்முறை
குக்கரில் கோதுமை ரவை மற்றும் பால், சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி கொள்ளவும்.
பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம் சேர்த்து பொன்னிறமாக வந்தவுடன் கோதுமை ரவை கலவையை போட்டு கிளறவும். சர்க்கரை கலந்து கிளறவும்.
பிறகு, நெய் ஊற்றி கிளறவும்.
ஒரு தட்டில் நெய் தடவி அதில் அந்த கலவையை ஊற்றி பாதாம் துருவி மேலே துவி பரிமாறவும்.
2 comments
இனிப்பு சேர்க்காமல் அல்வா செய்ய முடியுமா? சர்க்கரை சேர்க்க மறந்துட்டீங்களா?
No need to add sugar for sweet