தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – ஒரு கப் (கழுவி கொள்ளவும்)
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – நான்கு (நறுக்கியது)
பூண்டு – ஐந்து பல்
உப்பு – தேவைகேர்ப
புளி – அரை எலுமிச்சை பழம் அளவு
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
குக்கரில் பாசிப்பருப்பு, வெங்கயம், தக்காளி, பூண்டு, பெருங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் இரண்டு டம்ளர் தண்ணிர் சேர்த்து வேகவிடவும்.
ஐந்து விசில் வந்தவுடன் இறக்கி கொள்ளவும்.
பிறகு, அதை கடைந்து கொள்ளவும், புளி கரைத்து அதில் ஊற்றவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கரிவேபில்லை போட்டு தாளிக்கவும், பிறகு, அந்த கலவையை ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி துவி இறக்கவும்.