தேவையான பொருட்கள்
பன்னீர் ரோஜா இதழ்கள் – ஒரு கைபிடியளவு
சர்க்கரை – 1௦௦ கிராம்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
நெய் – இரண்டு டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
செய்முறை
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் ரோஜா இதழ்கள் போட்டு வதக்கி விழுதாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை முழுகும் அளவிற்கு தண்ணிர் ஊற்றி பாகு பதம் வந்தவுடன் அரைத்த ரோஜா விழுதை பாவில் சேர்த்து, நெய் விட்டு கிளறவும்.
ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.