தேவையான பொருட்கள்
பூண்டு – 5௦ கிராம்
இஞ்சி – 5௦ கிராம்
பனங்கற்கண்டு – 5௦ கிராம்
நெய் – இரண்டு டீஸ்பூன்
செய்முறை
இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பனங்கற்கண்டை பொடி செய்து கொள்ளவும்.
பூண்டை தோல் நீக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து மிக்ஸ்யில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
அந்த கலவையுடன் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அந்த கலவையை சேர்த்து கிளறி இறக்கவும்.