328
தேவையான பொருட்கள்
தயிர் – ஒரு கப்
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – நான்கு பல்
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)
கடுகு – கால் டீஸ்பூன்
எண்ணெய் – தேவைகேற்ப
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
வெறும் கடாயில் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுத்து மிக்ஸ்யில் பவுடர் செய்து கொள்ளவும்.
பிறகு, தயிர், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சட்னி போல் அரைத்து கொள்ளவும்.
பின்பு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து அதில் கொட்டி சாதத்துடன் பரிமாறலாம்.