தேவையான பொருட்கள்
தேங்காய் – கால் முடி (பொடியாக நறுக்கியது)
வறுத்த கடலை பருப்பு – 25 கிராம்
உளுத்தம் பருப்பு – அரை தேகரண்டி
கடுகு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் – மூன்று (நறுக்கியது)
கரிவேபில்லை – சிறிதளவு
செய்முறை
தேங்காய், வறுத்த கடலை பருப்பு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கரிவேபில்லை சேர்த்து தாளித்து அரைத்த கலவையில் கொட்டி இட்லி, தோசையுடன் பரிமாறவும்.
Coconut Chutney recipe in English