தேவையான பொருட்கள்
சிறுபருப்பு – 1௦௦ கிராம்
புளி – 2௦ கிராம்
காய்ந்த மிளகாய் – ஐந்து
சாம்பார் பொடி – இரண்டு தேகரண்டி
கடுகு – அரை தேகரண்டி
வெந்தயம் – அரை டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
சாம்பார் வெங்காயம் – 75 கிராம்
தக்காளி – 5௦ கிராம்
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
பருப்பை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
ஒரு கப் சுடுநீரில் புளி, உப்பு சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
பிறகு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி புளி தண்ணீரை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
வேகவைத்த பருப்பை கொட்டி கொதிக்கவிடவும்.
சாம்பார் பவுடர் சேர்த்து, இறக்கி இட்லியுடன் பரிமாறலாம்.